Saturday, January 14, 2012

பொங்கல் வாழ்த்து!


பொங்குகவே பொங்கல் பொங்குகவே

பொங்கலோ பொங்கலென்று பொங்குகவே !



சங்கம் அமைத்து மொழிவளர்த்த

சங்கத்தமிழ் மண்ணில் என்றும்

சாதிமத பேதமின்றி மக்கள்

சமதர்ம வாழ்வு வாழ்ந்திடவே

                                                               (பொங்குகவே)

அனைவர்க்கும் கல்விநாட்டில் கிட்டிடவே

அறிவொளி பெற்றுநாளும் திகழ்ந்திடவே

அறியாமை இருளும் அகன்றிடவே

அறிவுவளம் நாட்டில் ஓங்கிடவே

                                                               (பொங்குகவே)

உலகில் சமாதானம் நிலவிடவே

உயர்வும் தாழ்வும் மறைந்திடவே

உத்தமர் காந்திகள் மீண்டும்

உதித்து இம்மண்ணைக் காத்திடவே

                                                               (பொங்குகவே)

பாட்டாளியும் படிப்பாளியும் சேர்ந்து

பாரதத்தை உயர்த்திடவே என்றும்

பாரபட்சம் நோக்காது நல்ல

பாங்காய் உழைத்து மகிழ்ந்திடவே

                                                               (பொங்குகவே)


அன்புடன்..........


கவி.செங்குட்டுவன்,

ஊத்தங்கரை - 635207.

அலைபேசி: 9842712109 / 9965634541

தொலைபேசி: 04341- 223011 / 223023

மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com