அறியாமை
என்னும்
அகத்தின்
இருளை
தெரியாமை
என்னும்
புறத்தின்
அழுக்கை
புரியாமல்
கூட
காத்திட
வேண்டாம்
வெறியோடு
சாய்த்திடுவோம்
அரிய
கல்வியாலே…..
கல்லாமை இருளை இல்லாமை ஆக்கிடவே
வெள்ளாமை முழுதையும் விலையாய் கொள்வோம்
கொல்லாமை நெறியைப் போற்றுதல் போலே
எள்ளாமை பண்பை என்றும் காப்போம்…..
மனிதப்
பிறவியின்
மகத்துவம்
காத்திட
மனிதாபிமானச்
செயல்கள்
செய்வோம்
நாளும்
மக்கள்
யாவரும்
சகோதர்
என்பதை
மனதில்
நினைத்தே
வாழ்வோம்
என்றும்…….
அன்பும் அறமும் அகத்தின் பன்பென
அனைவரும் அறிந்திட உரைப்போம் என்றும்
அன்னைத் தமிழின் மொழிகள் யாவும்
என்னை உயர்த்தும் என்றே சொல்வோம்…..
ஊரும்
உயர
உலகம்
தழைக்க
உண்மைத்
தன்மையை
பேணுவோம்
என்றும்
பொய்மை
என்னும்
பொல்லாத
சொல்லை
பொசுக்கியே
படிப்போம்
அகராதி
தன்னிலே….
கல்வி என்னும் ஆயுதம் கொண்டே
கள்ளி எடுப்போம் அறிவின் ஊற்றை
சொல்லிச் சொல்லியே சொக்க வைப்போம்
வெள்ளிச் சலங்கையின் ஓசையைப் போலே…..